சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இணையும் புதிய படம்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இணையும் புதிய படம்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்


சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று மதராஸி படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ”தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள படம் தொடர்பான அப்டேட்டை தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கொடுத்துள்ளார். அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *