Gulshan Devaiah to play Kulashekara in Rishab Shetty’s ‘Kantara Chapter 1’ first look out | ரிஷப் ஷெட்டியின் “காந்தாரா 2”

Gulshan Devaiah to play Kulashekara in Rishab Shetty’s ‘Kantara Chapter 1’ first look out | ரிஷப் ஷெட்டியின் “காந்தாரா 2”


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி அதன் 2-ம் பாகத்தில் பணியாற்றி வருகிறார், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்து, தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரொடக்‌சன் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் காந்தாரா சேப்டர் – 1 படத்தில், நடிகர் குல்ஷனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து, போஸ்டரை வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘காந்தாரா’ படத்தின் 2ம் பாகத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் குலஷேகரன் என்ற கதபாத்திரத்தில் நடிகர் குல்ஷன் நடிப்பதாக அறிவித்து, போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை ருக்மணி வசந்த் இந்த படத்தில் கனகவதியாக நடித்துள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *