“கேப்டன் பிரபாகரன்” படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

“கேப்டன் பிரபாகரன்” படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்


சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வகையில், விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் வருகிறது. ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கேப்டன் பிரபாகரன் படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டது. வரும் ஆகஸ்ட் 22ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் ஒரு புத்தம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் வகையில், நவீன 4கே தொழில்நுட்பத்தில் இப்படம் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *