ஸ்மிருதி இரானிக்கு அடித்த 'ஜாக்பாட்'

ஸ்மிருதி இரானிக்கு அடித்த 'ஜாக்பாட்'


கோப்புப்படம் 

சின்னத்திரை தொடர்களில் கலக்கிய ஸ்மிருதி இரானி, 2003-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014 முதல் 2024-ம் ஆண்டு வரை மத்திய மந்திரியாக பதவி வகித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

மந்திரி பதவி போன பிறகு, ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார். அந்த வகையில் தனக்கு பெரும் பெயரை வாங்கி கொடுத்த ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற தொடரின் இரண்டாம் சீசனில் அவர் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த தொடர் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஸ்மிருதி இரானியின் சம்பளம் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி, ஒரு எபிசோட்டுக்கு ரூ.14 லட்சத்தை ஸ்மிருதி இரானி சம்பளமாக பெறுகிறாராம்.

இதன்மூலம் இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார், ஸ்மிருதி இரானி. செல்லும் இடமெல்லாம் யோகம் அடிப்பதால், மச்சக்காரர் என்று அவரை புகழ்கிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *