துருவ் விக்ரமின் "பைசன்" படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

துருவ் விக்ரமின் "பைசன்" படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’, மற்றும் ‘வாழை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். .

இதைத் தொடர்ந்து ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். அதன்படி, இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பைசன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *