நடிகை சரோஜா தேவி காலமானார்

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.
இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிப்பிற்காக கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என பல புனை பெயர்கள் இவருக்கு கிடைத்தன.
இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரது நடிப்பிற்க்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.






