இணையத்தை கலக்கும் ஸ்ரீலீலாவின் ”ஜூனியர்” பட டிரெய்லர்|JuniorTrailer Out Now

இணையத்தை கலக்கும் ஸ்ரீலீலாவின் ”ஜூனியர்” பட டிரெய்லர்|JuniorTrailer Out Now


சென்னை,

ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ள ‘ஜூனியர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிட்டுள்ளார். இதில் கதாநாயகனாக கிரீத்தி ரெட்டி நடித்துள்ளார்.

காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் இப்படம் மட்டுமில்லாமல், கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும், தமிழில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்திலும், தெலுங்கில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ”மாஸ் ஜாதரா” படத்திலும் நடித்து வருகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *