அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல்தான் – கார்த்தி

அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல்தான் – கார்த்தி


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர்களான மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் ‘ஓஹோ எந்தன் பேபி’படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா நடைப்பெற்று வருகிறது. அதில் திரைப்பிரபலங்களான கார்த்தி, வெற்றி மாறன், அஷ்வத் மாரிமுத்து, ஏ.ஜி.எஸ் அர்ச்சனா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் கார்த்தி “ஒரு அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல் தான், அப்பா கையில் தூக்கி வளர்த்தார் என்றால் அண்ணன் தோளில் தூக்கி வளர்த்தார். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவரைப்பார்த்து நிறைய கற்று கொண்டேன். நான் திரைத்துறையில் அறிமுகம் ஆகும் போது என்னை மிகவும் அன்போடு வரவேற்று திரைத்துறை மக்கள் வாழ்த்தினர். அந்த அன்பு திரைத்துறையில் நுழையும் அனைவருக்கும் நாம் பகிர வேண்டும் அந்த ஒரு காரணத்திற்காக தான் நான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *