"மெட்ராஸ் மேட்னி" படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

"மெட்ராஸ் மேட்னி" படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்


சென்னை,

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ‘என்னடா பொழப்பு இது’ எனத்தொடங்கும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்து அவர் ” இப்படம் மனதிற்கு இதம் தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட்  நடிப்பு பிரமாதம். இந்த அற்புதமான திரைப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்” என கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *