தேஜா சஜ்ஜா நடித்த "மிராய்" படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தேஜா சஜ்ஜா நடித்த "மிராய்" படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தேஜா சஜ்ஜா. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சாம்பி ரெட்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், பிரசாந்த வர்மா இயக்கத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான் படத்தின் மூலம் பிரபலமானார்.

அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார்,சமுத்திரக்கனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் படம் ‘மிராய்’.

பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் கடந்தாண்டு வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். ஆகஸ்ட் 1ம் தேதி ‘மிராய்’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழுவினர், உலகளவில் எட்டு மொழிகளில் படம் 2டி மற்றும் 3டி முறையில் திரையிடப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், தேஜா சஜ்ஜா நடித்த ‘மிராய்’ படத்தின் டீசரை வரும் 28ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *