பிரபு தேவாவின் ‘யங் மங் சங்’ பட ரிலீஸ் அப்டேட்

பிரபு தேவாவின் ‘யங் மங் சங்’ பட ரிலீஸ் அப்டேட்


சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருப்பவர் பிரபுதேவா. 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடந்து ‘மைக்கில் முகோசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2017-ம் ஆண்டில் பிரபு தேவா இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் ‘யங் மங் சங்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, லட்சுமி மேனன், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் ஒரு சில காரணத்தால் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ‘யங் மங் சங்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தப் படம் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வருகிற மே மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *