சூர்யாவின் "ரெட்ரோ" டிரெய்லர் வெளியானது

சூர்யாவின் "ரெட்ரோ" டிரெய்லர் வெளியானது


சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 மணி நேரம்கொண்ட படமாக இது உருவாகியிருக்கிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சூர்யாவின் “ரெட்ரோ” டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரில் சூர்யா பேசும் வசனங்கள் வைரலாகி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *