’ராமாயணம்’ – முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பில் சாய் பல்லவி |’Ramayana’

’ராமாயணம்’ – முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பில் சாய் பல்லவி |’Ramayana’


மும்பை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்திய தகவலின்படி சாய் பல்லவி முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்.

அதன்படி, அசோக வனத்திற்கு ராவணன் சீதையை கடத்திச் செல்லும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சன்னி தியோல் அனுமானாகவும், பாபிதியோல் கும்பகர்ணனாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் 2-ம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகின்றன.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *