அமரன் வெற்றிவிழாவில் சிவகார்த்திகேயனின் Bold Speech.. சம்பளம் வந்திடுச்சு, ஆனால் சிலர்?

அமரன் வெற்றிவிழாவில் சிவகார்த்திகேயனின் Bold Speech.. சம்பளம் வந்திடுச்சு, ஆனால் சிலர்?


அமரன் படம்

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் அமரன்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாக இப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்துள்ளது.

அமரன் வெற்றிவிழாவில் சிவகார்த்திகேயனின் Bold Speech.. சம்பளம் வந்திடுச்சு, ஆனால் சிலர்? | Sivakarthikeyan Bold Speech On Amaran 100 Days

இந்த ஸ்பெஷல் விஷயத்தை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், படத்தின் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றம் இப்படம் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் அழைத்து வெற்றி விழா நடத்தினார்கள்.

சிவகார்த்திகேயன்

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய பேல்டான பேச்சு தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேடையில், கமல் சார் எனக்கு ரொம்ப கரெக்ட்டா சம்பளம் வந்திருச்சு, ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்திருச்சு சார், இப்படி நடக்குறது அரிதான விஷயம் சார். இந்தக் கதை அன்பு அண்ணனுக்கு எல்லாம் தெரியும்.

என்னோட படங்களின் ரிலீஸுக்கு முன்னாலேயே பாதி நேரம் அன்பு அண்ணன் ஆஃபீஸ்ல தான் இருப்பேன். சம்பளம் குடுக்காம இருக்கிறது மட்டும் இல்லை, வாங்குற சம்பளத்த பிடுங்கிட்டு போற குரூப்பும் இருக்கு.

உங்களுக்கு தெரியாதது இல்ல சார், நீங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்திருப்பீங்க, எனக்கு இது ஆச்சரியமா இருக்கு சார்.

எனக்கு படம் ரிலீஸ் 6 மாதம் முன்பே சம்பளம் கொடுத்து அதைத்தாண்டி மரியாதையும் ரொம்ப முக்கியமா கொடுக்கிறதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம் என பேசியுள்ளார்.

அமரன் வெற்றிவிழாவில் சிவகார்த்திகேயனின் Bold Speech.. சம்பளம் வந்திடுச்சு, ஆனால் சிலர்? | Sivakarthikeyan Bold Speech On Amaran 100 Days


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *