VJ பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை.. மீண்டும் அவருடன் பேசுகிறாரா மணிமேகலை

பிரியங்கா – மணிமேகலை
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5ல் VJ பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் இடையே உரசல் ஏற்பட்ட பிரச்சனையாக வெடித்துள்ளது.
இதனால் விஜய் டிவியில் இருந்து மணிமேகலை வெளியேறினார். இதன்பின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கினார். இது அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. மேலும் தற்போது ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி ஒன்றை சோலோவாக தொகுத்து வழங்கப்போகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா உடனான பிரச்சனை குறித்தும், அவருடன் மீண்டும் பேசுகிறீர்களா என்கிற கேள்விக்கும் மணிமேகலை பதிலளித்துள்ளார்.
பிரியங்காவுடன் பேசுகிறாரா மணிமேகலை
“ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இதற்கு முன் நான் நிகழ்ச்சிகள் செய்தது இல்லை. எனவே அங்கிருந்து அழைப்பு வந்தபோது கொஞ்சம் யோசித்தேன். ஆனால், ஒரு பெரிய சண்டை சச்சரவுக்கு பிறகு அந்த வாய்ப்பு வந்தது. அது நல்லதாகத்தான் இருக்கும் என என்னுடைய உள் மனது சொல்லியது. நான் எப்போதுமே என்னுடைய உல் மனது என்ன சொல்கிறதோ, அதைத்தான் கேட்பேன்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நல்ல அனுபவம். சில விருதுகளும் அந்த நிகழ்ச்சி எனக்கு வாங்கி கொடுத்தது. 16 வருடங்களாக இந்த வேலையை நான் செய்து வருகிறேன். ரொம்பவே பிடித்த வேலை.
கடந்த ஆண்டு பிரியங்காவுடன் நடந்த சம்பவத்துக்கு பின் அவருடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. என்னை பொறுத்தவரை அது முடிந்துபோன மேட்டர்” என கூறியுள்ளார் மணிமேகலை.