Send Help திரை விமர்சனம்

Send Help திரை விமர்சனம்


Send Help திரை விமர்சனம்

ஹாலிவுட் திரையுலகில் பல வித்தியாசமான திரில்லர் கதைக்களம் வந்துள்ளது, அந்த வகையில் பிரபல இயக்குனர் சாம் ரைய்மி இயக்கத்தில் ராச்சல் மெக்டம்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு சர்வைவல் திரில்லர் எப்படி வந்துள்ளது? பார்ப்போம்.

Send Help திரை விமர்சனம் | Send Help Movie Review


கதைக்களம்



ராச்சல் மெக்டம்ஸ் ஒரு பெரிய கார்ப்ரைட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாழ்க்கையில் அடுத்தக்கட்டம் போறதுக்கு ப்ரோமோஷனுகாக காத்திருக்கிறார்.


அந்த நேரத்தில் கம்பெனி அந்த ஓனர் மகன் கைக்கு வர, அவரோ ராச்சல்-க்கு வரவேண்டிய ப்ரோமோஷனை தன்னுடன் இருக்கும் நண்பர் ஒருவருக்கு கொடுக்கிறார்.


அதை தொடர்ந்து ராச்சல் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக, ஒரு கட்டத்தில் அவரே எனக்கு ஏன் இந்த பதவியில்லை என சொல்ல, அவரோ உன் பெர்ப்பாமன்ஸ் சரியில்லை என சொல்கிறார்.



இவரோ முழு அர்ப்பணிப்பு கொடுத்து வேலை செய்ய, MD சரி உனக்கு ஒரு வாய்ப்பு, நாம் வேலை விஷயமாக வெளிநாடு செல்கிறோம், அங்கு உன் திறமையை காட்டு, உனக்கு ப்ரோமோஷன் என சொல்ல, அவர்கள் சென்ற விமானம் க்ராஸ் ஆகி ஒரு தீவில் விழுகிறது, அந்த தீவில் இவர்கள் மாட்டிக்கொள்ள, அதன் பிறகு நடக்கும் அட்டகாசமான அதிரடியே இந்த செண்ட் ஹெல்ப்.

Send Help திரை விமர்சனம் | Send Help Movie Review



படத்தை பற்றிய அலசல்



படத்தின் கதையே இரண்டாக பிரிக்கலாம், வாய்ப்பிற்காக ஏங்கி கடுமையாக உழைக்கும் ராச்சல், விபத்தால் அந்த தீவில் மாட்டிய பிறகு அங்கிருந்து கதை வேறு தளத்திற்கு செல்கிறது, அட என்னடா இது, இவ்ளோ நேரம் நாம் பார்த்த படம் தானா என்று ஆச்சரியப்படுத்துகிறது.



ராச்சல் பெர்ப்பாமன்ஸ் வெறித்தனம் என்று தான் சொல்ல வேண்டும், அத்தனை பொறுமையாக இருந்த பெண் அந்த தீவில் மாட்டிய பிறகு கொடுக்கும் ட்ராஸ்பர்மேஷன் அதகளம் தான்.

அதே போல் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரும் Dylan-ம் தன் பங்கிற்கு சிறப்பாக நடித்துள்ளார், முதலில் ராச்சல்-டம் ஆட்டிடியூட் காட்டி, பிறகு அவர் படும்பாடு சாம் ரைய்மி தன் ரசிகர்களுக்கு முக்கியமாக பெமினிஸ்ட்-களுக்கு விருந்து வைத்துள்ளார்.


ஆனால், படத்தில் பல காட்சிகள் நாம் முன்பே பார்த்த பல சர்வைவர் படங்களில் பார்த்தது போலவே காட்சிகள் இருக்கிறது. புதுமையாக என்று சொன்னால் பெரிதாக ஒன்றுமில்லை, அதே நேரத்தில் எந்த ஒரு காட்சியும் நமக்கு போர் அடிக்காது.


வன்முறை காட்சிகள் நிரம்பி வழிவதால் இது எல்லோருக்குமான படமில்லை, 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க வேண்டும்.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை அந்த தீவு எங்கு எடுத்தார்கோ அல்லது சிஜி ஒர்க்-கோ அனைத்தும் அருமை.

Send Help திரை விமர்சனம் | Send Help Movie Review


க்ளாப்ஸ்



ராச்சல் மெக்டம்ஸ்-Dylan பெர்ப்பாமன்ஸ்.

திரைக்கதை


பல்ப்ஸ்



பல படங்களில் பார்த்து பழகி போன நிறைய காட்சிகள்.



மொத்தத்தில் Send Help சர்வைவர் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு டைம் பாஸ் வாட்ச். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *