Mad Square திரை விமர்சனம்

Mad Square திரை விமர்சனம்


தெலுங்கு சினிமாவில் அடிக்கடி தற்போதெல்லாம் இளைஞர்களுக்கான படம் வந்துக்கொண்டே தான் உள்ளது.

அந்த வகையில் மேட் என்ற கல்லூரி நண்பர்கள் பற்றி கலாட்டாவாக வெளிவந்து செம ஹிட் அடித்து தற்போது இரண்டாம் பாகமாக மேட் ஸ்கோயர் வெளிவந்துள்ளது, படம் எப்படி பார்ப்போம்.

Mad Square திரை விமர்சனம் | Mad Square Movie Review


கதைக்களம்


மனோஜ், தாமோதர், அஷோக் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவரவர்கள் தங்கள் வேலையை பார்க்க, நண்பர் லட்டுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

இதை அறிந்த நண்பர்கள் லட்டு திருமணத்துக்கு செல்ல, அங்கு பெண் வேறு ஒருவருடன் ஓடி விடுகிறார்.

இதை தொடர்ந்து லட்டு மிகவும் மனம் நொந்து போகிறார்.

லட்டுவை உற்சாகப்படுத்த நண்பர்கள் மூவரும் கோவா ட்ரிப் போக, அங்கு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நெக்லஸ் திருடப்படுகிறது. அந்த நெக்லஸ் இவர்கள் கைக்கு எப்படியோ வர, வில்லன் சுனில் இவர்களை பிடிக்கிறார்.


அதோடு லட்டு அப்பாவை பிடித்து வைத்துக்கொண்டு நெக்லஸ் வந்தால் தான் உன் அப்பா உனக்கு என சொல்ல, பிறகு என்ன ஆனது என்பதன் கலாட்டா தான் இந்த மேட் ஸ்கோயர்.


படத்தை பற்றிய அலசல்


அஷோக், தாமோதர், மனோஜ் மூவரும் அதே எனர்ஜி, லட்டு எனக்கு எந்த குடிப்பழக்கமும் இல்லை என பெண்ணிடம் வீடியோ காலில் பேசும் போது, பின்னாடி பாட்டிலுடன் தாமோதர் வருவது என படம் முழுவதும் ரகளை செய்துள்ளனர்.


நெக்லஸ் தேடி அலைய, போலிஸ் கெட்டப்பில் எல்லோரும் ஒரு க்ளப்பிற்கு போக, அப்போது கூட லட்டு, எனக்கு மட்டும் லூஸான பேண்ட் கொடுத்துட்டீங்க என பொலம்புவது என எல்லா சீரியஸ் சீன்களிலும் ஒரு காமெடி கவுண்டர் பறக்கிறது.



போலிஸ் இவர்களை தேடும் இடத்தில் காலேஜ் சீனியர் ஹெல்ப் பண்ணுவது, லைலா என்ற பெண்ணை தேடி வரும் போது அந்த லைலாவின் காதலன் பக்கத்து கல்லூரி சீனியர் அனுதீப் என பல சர்ப்ரைஸ்.


வில்லனாக சுனில் எது சொன்னாலும் அதற்கு நேர் எதிர்மறையாக செய்வது, இறுதியில் பாட்டு போட்டு எல்லோரையும் அடிப்பது என அவர் பங்கிற்கு கலாட்டா செய்துள்ளார்.


ஆனால், லாஜிக் என்பதை நூல் அளவிற்கு கூட பார்க்க கூடாது, என்ன தான் காமெடி படம் என்றாலும், துளி அளவு கூட லாஜிக் பார்க்காமல் மூளையை கழட்டி வைக்க சொல்கிறார் போல இயக்குனர்.


அதோடு முதல் பாகத்தில் கல்லூரி சுற்றியே செம ஜாலியாக அழுத்தமான காட்சிகளால் செல்ல, இரண்டாம் பாகத்தில் வேறு களம் என்றாலும், கொஞ்சம் கூட ஒரு அழுத்தம் இல்லாத காட்சிகள் காமெடிகளால் அலங்காரமிட்டு செல்கிறது.


படத்தின் பாடல்கள் பொறுமையை சோதிக்கிறது.

க்ளாப்ஸ்


வழக்கம் போல நடிகர்களின் Fun கலாட்டா.

ஒன் லைன் கவுண்டர் வசனங்கள்.



பல்ப்ஸ்


அழுத்தமே இல்லாத காட்சிகள், பாடல்கள்


மொத்தத்தில் மேட் ஸ்கோயர் 2 மணி நேரம் கதையே தேவையில்லை, காமெடி மட்டும் போதும் என்று நினைத்தால் கண்டிப்பாக விசிட் அடிக்கலாம்.

ரேட்டிங் 2.75/5 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *