Love Marriage திரைவிமர்சனம்

Love Marriage திரைவிமர்சனம்


நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் Love Marriage. கஜராஜ், அருள்தாஸ், ரமேஷ் திலக், சுஷ்மிதா பட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளைஞர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த Love Marriage படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

Love Marriage திரைவிமர்சனம் | Love Marriage Movie Review



கதைக்களம்



33 வயதாகும் ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சொந்தத்தில் கூட அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார்கள். இதனால் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது.



நிச்சயத்திற்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பி பெண் வீட்டிற்கு செல்கிறார். நிச்சயதார்த்தம் நன்றாக நடந்து முடிய, ஊருக்கு கிளம்பும் வேளையில், அவர்கள் வந்த வண்டியில் கோளாறு ஏற்படுகிறது.

இதனால் இன்று ஒரு இரவு பெண் வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலை செல்லலாம் என முடிவு செய்கிறார்கள். 

Love Marriage திரைவிமர்சனம் | Love Marriage Movie Review

ஆனால், அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண் வீட்டில் தங்கி விடும் சூழல் ஏற்படுகிறது.

இந்த சமயத்தில், கட்டிக்கபோகும் பெண்ணிடம் பேசி பழகி நெருக்கமாக வேண்டும் என முயற்சி செய்கிறார் விக்ரம் பிரபு.

ஆனால், கதாநாயகியோ வேறு ஒருவரை காதலித்து வருகிறார். அவர் வேறொரு சாதி என்பதால் இவர்கள் திருமணத்திற்கு கதாநாயகியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

அதற்கு பதிலாக விக்ரம் பிரபுவை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துவிட்டனர்.

Love Marriage திரைவிமர்சனம் | Love Marriage Movie Review

இப்படியிருக்க, ஒரு நாள் தான் காதலித்து வந்தவனுடன் கதாநாயகி ஓடிப்போய் விடுகிறார். இதனால் திருமணம் நின்று போக, கதாநாயகன் விக்ரம் பிரபு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழ, அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை..


படத்தை பற்றிய அலசல்


கதாநாயகன் விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். அதே போல் மற்ற அனைத்து நடிகர்கள், நடிகைகள் நடிப்பும் சிறப்பாக இருந்தது.

குறிப்பாக டாக்சிக் மாமாவாக நடித்துள்ள அருள்தாஸ் நன்றாக ஸ்கோர் செய்துவிட்டார்.

மேலும் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது. ஆனால், ரமேஷ் திலக் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என தோன்றியது.

Love Marriage திரைவிமர்சனம் | Love Marriage Movie Review



படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை காட்சி வரை திரைக்கதையை அழகாக அமைத்திருந்தார் இயக்குநர் ஷண்முக பிரியன். ஆனால், இடைவேளைக்கு பின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வு நமக்கு ஏமாற்றத்தை தருகிறது. அது இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாகும்.

திருமணம் ஆகாமல் ஒரு ஆண் படும் வேதனை, இந்த சமூகத்தில் அவனுக்கு எற்படும் அவமானங்களை திரையில் காட்டிய விதம் அருமை. அதே போல் சாதியை காரணமாக வைத்து நடக்காமல் போகும் திருமணங்கள் குறித்து பேசியதற்கு பாராட்டுக்கள். சாதியா இல்லை பெற்ற மகளா என்கிற சூழலில், கதாநாயகியின் தந்தை எனக்கு என் மகள்தான் முக்கியம் என எடுத்த முடிவு நன்றாக இருந்தது.

Love Marriage திரைவிமர்சனம் | Love Marriage Movie Review

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் பட்டையை கிளப்பியுள்ளார். ஆனால், இரண்டாம் பாதியில் காட்சிகள் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை என்பதால், அங்கு ஷான் ரோல்டன் இசையும் நமக்கு பெரிதளவில் தெரியவில்லை.



ஒளிப்பதிவு படத்தை அழகாக காட்டியுள்ளது. எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.

Love Marriage திரைவிமர்சனம் | Love Marriage Movie Review



ப்ளஸ் பாயிண்ட்



நடிகர்கள், நடிகைகள் நடிப்பு



படத்தின் முதல் பாதி



நகைச்சுவை


மைனஸ் பாயிண்ட்



இரண்டாம் பாதி



மொத்தத்தில் இனிமையாக துவங்கி சுமாராக முடிந்தது இந்த Love Marriage..

Love Marriage திரைவிமர்சனம் | Love Marriage Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *