Kpy பாலா ஹீரோவாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் எப்போது?.. அதிரடி தகவல்

Kpy பாலா
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. கலக்கப்போது யாரு நிகழ்ச்சி அவருக்கு நல்ல புகழ் கொடுக்க Kpy பாலா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து குக் வித் கோமாளி பக்கம் வந்தவர் செம ரைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் பல தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். தற்போது, ஹீரோவாக ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
ரிலீஸ் எப்போது?
இயக்குநர் ஷெரீப்பின் இயக்கும் இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.