Here I Come திரை விமர்சனம்

Here I Come திரை விமர்சனம்


ஹாலிவுட் திரையுலகில் பல சர்வைவேல் படங்கள் வந்துள்ளது, அந்த வகையில் Matt Bettinelli-Olpin இயக்கத்தில் Samara Weaving நடிப்பில் ரெடி ஆர் நாட் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது ரெடி ஆர் நாட் 2 முதல் பாகத்தை போலவே ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

Ready or Not 2: Here I Come திரை விமர்சனம் | Ready Or Not 2 Here I Come Movie Review

கதைக்களம்


முதல் பாகத்தில் விட்டதில் இருந்தே படம் தொடங்குகிறது, மெக்கலே(சமரா படத்தின் நாயகி) தெரியாமல் ஒரு டெவில் கல்ட் குடும்பத்தில் திருமணம் செய்து, முதல் இரவு நீ உயிரோடு எங்களிடம் இருந்து தாண்டினால் தான் எங்கள் குடும்பத்தில் ஒருத்தி என சொல்ல எல்லோரையும் கொன்று மெக்கலே தப்பிக்கிறார்.

Ready or Not 2: Here I Come திரை விமர்சனம் | Ready Or Not 2 Here I Come Movie Review

அதை தொடர்ந்து இவர் தப்பித்தது இந்த உலகில் உள்ள டெவில் குடும்பங்கள் அனைவருக்கும் தெரிய, இவர் தான் நம் டெவில் குழுவின் தலைவி சேர்-ல் உட்கார சரியான ஆள் என மெக்கலே மற்றும் அவருடைய தங்கையை மருத்துவமனையில் கடத்துகின்றனர்.

Ready or Not 2: Here I Come திரை விமர்சனம் | Ready Or Not 2 Here I Come Movie Review

மீண்டும் இந்த குடும்பத்தினர் நீ எங்களிடமிருந்து தப்பிக்க வேண்டும், தப்பித்தால் நீ தான் எங்களுக்கு தலைவி, இல்லை யார் மெக்கலேவை கொல்கிறார்களோ அவர் தலைவர் என சொல்ல, மீண்டும் அதே ஆடுபுலி ஆட்டம் தொடங்க, மெக்கலே இந்த முறை தன் தங்கையும் சேர்த்து காப்பாற்றும் பொறுப்பு வர, இதிலிருந்து தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை.

படத்ததை பற்றிய அலசல்


படத்தின் நாயகி சமாரா மெக்கலே கதாபாத்திரத்தில் வழக்கம் போல் தூள் கிளப்புகிறார், இந்த முறை தன் தங்கையும் சேர்த்து காப்பாற்றும் பொறுப்பு, இரண்டு பேரும் சேர்ந்து தப்பிக்க போராடுகின்றனர்.


முதல் பாக ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை அறிந்து இயக்குனர், படம் முழுவதும் வன்முறை, இரத்தம் தெறிக்க தெறிக்க அனைத்து காட்சிகளையும் படமாக்கியுள்ளார்.

Ready or Not 2: Here I Come திரை விமர்சனம் | Ready Or Not 2 Here I Come Movie Review

அதிலும் விதிகளை மீறினால் அப்படியே வெடித்து சிதறும் உடன், வாஷிங் மிஷினில் சானிட்டைர் ஊற்றி கொல்வது என விதவிதமாக இயக்குனர் தன் கற்பனை வன்முறை குதிரையை பறக்கவிட்டுள்ளார்.


ஆனால், முதல் பாகத்தில் மெக்கலே மேல் நமக்கு ஒரு பரிதாபம், படத்தில் அவர் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற பதட்டமும் இருக்கும், ஆனால், இதில் எப்படியும் இவர் தப்பி விடுவார் என்பதால் நமக்கு பதட்டமே வரவில்லை.

Ready or Not 2: Here I Come திரை விமர்சனம் | Ready Or Not 2 Here I Come Movie Review

அதற்கு ஏற்றது போல் இயக்குனரும் மெக்கலே சிஸ்டர்ஸ் வைத்து நிறைய காமெடி வசனங்கள் வைத்தது, நமக்கு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் போகிறது

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை, ஸ்டெண்ட் காட்சிகள் அனைத்தும் டாப் லெவல் தான்.


க்ளாப்ஸ்


மெக்கலே சிஸ்டர்ஸ் பெர்ப்பாமன்ஸ்


ஸ்டெண்ட் காட்சிகள்.


பல்ப்ஸ்



எந்த ஒரு பதட்டமும் இல்லாத காட்சிகள்.


இதுதான் நடக்கும் என்ற அடுத்தடுத்த யூகிக்க கூடிய காட்சிகள்.


மொத்ததில் இந்த ரெடி ஆர் நாட் 2, முதல் பாகம் அளவிற்கு நம்மை பதட்டப்பட வைக்கவில்லை என்றாலும், பார்த்தால் போர் அடிக்காத ரகம் தான்.

Ready or Not 2: Here I Come திரை விமர்சனம் | Ready Or Not 2 Here I Come Movie Review


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *