Ethirneechal: இனி பேச்சு இல்லை வீச்சு தான்… வெளியானது எதிர்நீச்சல் 2-ன் புதிய ப்ரொமோ

Ethirneechal: இனி பேச்சு இல்லை வீச்சு தான்… வெளியானது எதிர்நீச்சல் 2-ன் புதிய ப்ரொமோ


எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகத்திற்கான புதிய ப்ரொமோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகியது. இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த பின்பு இந்த சீரியலின் கதை மிக விரைவில் நிறுத்தப்பட்டது.


பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்த வந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

Ethirneechal: இனி பேச்சு இல்லை வீச்சு தான்... வெளியானது எதிர்நீச்சல் 2-ன் புதிய ப்ரொமோ | Ethirneechal 2 Second Promo Release


முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு இடையே மாட்டிக் கொண்ட பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்து வெளியே வருவது போன்ற காட்சி அமைந்தது.

இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகைகளில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மட்டும் மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் முந்தைய சீசன் காட்சிகளை காண்பித்து, இனி இப்படி நடக்காது… இனி இந்த மாதிரியான பேச்சே கிடையாது… ஒரே வீச்சு தான் என்றும் கூறி மாஸ் காட்டியுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *