CWC வரலாற்றில் முதல் முறை!! நடுங்கிப் போன போட்டியாளர்கள்.. பரபரப்பு ப்ரோமோ

குக் வித் கோமாளி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனை ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்க 2ம் பாகம் அதே வேகத்தில் தொடங்கப்பட்டது.
அடுத்தடுத்த சீசன்களின் வெற்றியால் இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் முதலில் சௌந்தர்யா எலிமினேட் செய்யப்பட்டார். இரண்டாவதாக கஞ்சா கருப்பு, மூன்றாவதாக சுந்தரி அக்காவும் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது ஏழு பேர் போட்டியிட்டு வருகின்றனர். இந்த வாரம் அடுத்த எலிமினேஷனுக்கான நாள் நெருங்கி உள்ளது.
பரபரப்பு ப்ரோமோ
இந்நிலையில், தற்போது ஒரு அதிரடி ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் பேன்ட்ரியை மூடியுள்ளனர்.
மேலும் சீக்ரெட் பாக்ஸ் என்ற ஒரு பெட்டியையும் வைத்துள்ளனர். அந்த பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து தான் இந்த வாரம் சமைக்க வேண்டும். இதனால் போட்டியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, இது தொடர்பான ப்ரோமோ வைரலாகி வருகிறது. இதோ,