65 ஊசி செலுத்தி 44 வயதில் கர்ப்பம் – கரு கலைந்ததால் கதறிஅழும் நடிகை

65 ஊசி செலுத்தி 44 வயதில் கர்ப்பம் – கரு கலைந்ததால் கதறிஅழும் நடிகை


3 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால் நடிகை சம்பவ்னா சேத் அழுதவாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.



சம்பவ்னா சேத்



போஜ்புரி படங்களில் ஐட்டம் டான்சராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சம்பவ்னா சேத்(sambhavna seth).

அதன் பிறகு பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும், சீரியல்களிலும் நடித்து பிரபல நடிகையாக மாறினார். 

sambhavna seth



இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னைவிட 8 வயது சிறியவரான அவினாஷ் திவேதியை(Avinash Dwivedi) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சம்பவ்னா சேத் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். 

3 மாத கர்ப்பம்

இதில் சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாகி விட்டதாக அவினாஷ் திவேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது இந்த தம்பதிகள் இணைந்து சோகத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். 

sambhavna seth Avinash Dwivedi

இதில் பேசிய அவினாஷ் திவேதி, சில மாதங்களுக்கு முன் என் மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தேன். IVF முறை மூலம் குழந்தை பெற்றெடுக்க முயற்சி செய்தோம். என் மனைவி 3 மாத கர்ப்பமாக இருந்தார்.



கரு கலைப்பு



பரிசோதனைக்கு சென்ற போது, குழந்தை நல்ல முறையில் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தை கேட்டு மகிழ்ச்சியடைந்தோம். சமீபத்தில் பரிசோதனைக்கு சென்ற போது இதயத்துடிப்பை ஸ்கேனில் கண்டுபிடிக்க முடியவில்லை என மருத்துவர் கூறினார். வேறு வழியின்றி கருவை கலைத்தோம் என கண் கலங்கியவாறு கூறினார்.

sambhavna seth crying



அடுத்ததாக பேசிய சம்பவ்னா சேத், தாயாவதை விட ஒரு பெண்ணுக்கு வேறு பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது. நான் இதற்காக 8 ஆண்டுகள் காத்திருந்தேன். குழந்தை பெற்றுக்கொள்வதற்காக 65 ஊசிக்கள் போட்டுக்கொண்டேன். 44 வயதில் தாயானதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேன்.


அடுத்த ஆண்டு என் கையில் குழந்தை இருக்கும் என்று நினைத்த எனது கனவை கடவுள் களைத்து விட்டார் என அழுதுகொண்டே பேசினார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.      


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *