6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு

6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு


பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் அனைவரும் பாலையா என்றுதான் அழைப்பார்கள். ஆக்ஷன் ஹீரோவாக தெலுங்கு திரையுலகில் கொண்டாடப்பட்டு வருகிறார்.



சாதாரணமான ஆக்ஷன் ஹீரோ அடித்தால் எதிரிகள் மட்டும் தான் பறப்பார்கள், அதுவே பாலையா தனது கையை அசைத்தாள் சுற்றியுள்ள கார், லாரி உள்ளிட்ட பல விஷயங்கள் காற்றில் தான் மிதக்கும்.

6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு | Actor Nandamuri Balakrishna Net Worth Details

இதை மற்றவர்கள் செய்தால் அதை நெட்டிசன்கள் உடனடியாக கலாய்த்து விடுவார்கள். அதே பாலையா ‘அது தான் டா மாஸ்’ என கூறுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.



Tatamma Kala என்கிற படத்தின் மூலம் இவர் ஹீரோவாக அறிமுகமானார். சுல்தான், சிம்ஹா, லைன், N.T.R: Mahanayakudu, அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாக்கு மஹராஜ் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு | Actor Nandamuri Balakrishna Net Worth Details



இன்று நடிகர் பாலகிருஷ்ணாவின் பிறந்தநாள் ஆகும். தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

சொத்து மதிப்பு


தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பாலகிருஷ்ணா, ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். ஹைதராபாத்தில் இவர் வசித்து வரும் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 50 கோடி என கூறப்படுகிறது.



நடிகர் பாலகிருஷ்ணாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 430 கோடி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் 6 கிலோ தங்க நகைகளும், 156 கிலோ வெள்ளியும், 580 காரட் வைரமும் சொந்தமாக உள்ளது என தெலுங்கு திரையுலக மீடியா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு | Actor Nandamuri Balakrishna Net Worth Details



ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால், அவர் தற்போது நடித்து வரும் அகண்டா 2 திரைப்படத்தின் செம மாஸ் டீசர் வெளியாகியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *