50-வது பிறந்தநாள்.. நடிகை சிம்ரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த தகவல்

50-வது பிறந்தநாள்.. நடிகை சிம்ரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த தகவல்


சிம்ரன்

90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, ப்ரியமானவளே, பஞ்சதந்திரம் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

50-வது பிறந்தநாள்.. நடிகை சிம்ரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த தகவல் | Actress Simran Net Worth Details

கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன், பின் முக்கிய துணை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இதில், இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

சொத்து மதிப்பு



இன்று நடிகை சிம்ரனுக்கு பிறந்தநாள், தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சிம்ரனுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

50-வது பிறந்தநாள்.. நடிகை சிம்ரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. சொத்து மதிப்பு குறித்து வெளிவந்த தகவல் | Actress Simran Net Worth Details

தனது சொந்த ஊரான மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் சொகுசு வீடு மற்றும் கோயம்புத்தூரில் பண்ணை வீடு இவருக்கு சொந்தமாக இருக்கிறது. மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் எல்லாம் அதிகாரபூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *