5 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தலைவர் தம்பி தலைமையி
ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி, கோ என பல தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் நடிகர் ஜீவா.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் தலைவர் தம்பி தலைமையில். இப்படத்தை நிதீஷ் சஹதேவ் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் Falimy எனும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் விவரம்
பொங்கல் ரேஸில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், 5 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது.






