3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

யூத்
தரமான திரைப்படங்களுக்கு தமிழக மக்கள் வரவேற்பை தர எப்போதுமே தவறியதே இல்லை. அப்படி சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம்தான் யூத்.
கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, மீனாட்சி, நளினி, அனிஷ்மா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், 3 நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 19 கோடி வசூல் செய்துள்ளது.






