25 வருடத்தை எட்டிய விஜய்-ஜோதிகா நடித்த குஷி.. படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குஷி படம்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒன்று விஜய்-ஜோதிகா.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இருவரும் நடித்த குஷி படம் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி தான் இப்படம் வெளியாகி இருந்தது. காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சொல்லப்போனால் விஜய் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக இப்படம் அமைந்தது எனலாம்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த குஷி படம் வெளியாகி 25 ஆண்டுகளை எட்டிவிட்டது. இதனால் குஷி பட ரசிகர்கள் சில டாக்குகள் உருவாகி படம் குறித்து பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
இந்த படம் உலகளவில் ரூ. 22 கோடிக்கு மேல் அப்போதே வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருக்கிறது.