2012ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் படங்களில்.. சிறப்பு பார்வை

தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் டாப் 10 படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க.
துப்பாக்கி
தளபதி விஜய் ஆக்ஷன் ஹீரோவாக கம் பேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது துப்பாக்கி தான். 2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இப்படத்தை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. முதல் முறையாக விஜய் நடித்த ஒரு படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இதுவே.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்யன், வித்யுத் ஜாம்வள் ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெறித்தனமாக இருக்கும்.
பிட்சா
ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படியும் ஒரு திரைக்கதையை அமைக்கலாம் என இப்படத்தின் மூலம் தெரியவந்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஹீரோ விஜய் சேதுபதி என பலரும் திருப்புமுனையாக இப்படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கல் ஒரு கண்ணாடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்கள் என 10 படங்களை பட்டியலிட்டால், அதில் கண்டிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் இடம்பெறும். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஆனால், இப்படத்தில் ரியல் ஹீரோவாக சந்தானம் கலக்கியிருப்பார். ஒவ்வொரு காட்சியிலும் சந்தானத்தின் நகைச்சுவை அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது. எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
வழக்கு எண் 18/9
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் மனதை தொடும் யதார்த்தமான கதைக்களத்தில் உருவான திரைப்படம் வழக்கு எண் 18/9. ஸ்ரீ, ஊர்மிளா, மிதுன், மனிஷா ஆகியோர் நடித்திருந்த இப்படம் தேசிய விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு பிரசன்னா என்பவர் இசையமைத்திருந்தார்.
கலகலப்பு
இயக்குநர் சுந்தர் சி-யின் இயக்கத்தில் உருவான இப்படம் இன்று வரை நகைச்சுவை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என சொல்லவைக்கிறது. விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம், மனோபாலா, ஜான் விஜய் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக சந்தானம் மற்றும் மனோபாலாவின் கம்போ அல்டிமேட்.
நான் ஈ
ஒரு மாஸ் ஹீரோவை வைத்து தான் ஹீரோயிசம் பண்ணமுடியும் என்பது இல்லை. சாதாரண ஒரு ஈ-யை வைத்து கூடமாஸ் கட்டலாம் என நான் ஈ படத்தின் மூலம் நிரூபித்தார் இயக்குநர் ராஜமௌலி. இப்படத்தில் சமந்தா, கிச்சா சுதீப், நாணி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் உலகளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்கி
யானையை வைத்து இப்படியொரு கதைக்களத்தை அமைத்து, அதை மாபெரும் அளவில் வெற்றிகாணலாம் என காட்டியவர் இயக்குநர் பிரபு சாலமன். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரை இப்படத்திற்கென்று தனி மரியாதை திரையுலகில் ஒன்று. இப்படத்திற்காக இசையமைப்பாளர் டி. இமான் போட்ட பாடல்கள் இன்று வரை அனைவரின் மனதில் இருந்தும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
நண்பன்
ஹிந்தியில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த 3 இடியட்ஸ் படத்தை, கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல், தமிழில் ரீமேக் செய்து அனைவரையும் ரசிக்க வைத்தார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன், சத்யராஜ், இலியானா என பலரும் நடித்திருந்தனர்.
2012ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. விஜய் மட்டுமின்றி இப்படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரின் கெரியரிலும் டாப் 10 சிறந்த திரைப்படங்கள் என்று எடுத்தால், அதில் கண்டிப்பாக நண்பன் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.