2006ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை

2006ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை


2006ஆம் ஆண்டு நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.


வரலாறு



கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் வரலாறு. மூன்று கதாபாத்திரங்களில் நடித்து நம்மை அசரவைத்து இருப்பார் அஜித். இவருடைய திரை வாழ்க்கையில் சிறந்த திரைப்படங்கள் என பட்டியலிட்டால், அதில் கண்டிப்பாக டாப் 5ல் வரலாறு படமும் இடம்பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அசின், கனிகா, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர்.

2006ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2006 Best Tamil Movies

புதுப்பேட்டை



செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் தலைசிறந்த ஒன்று என்றால், அது புதுப்பேட்டை தான். தமிழ் சினிமாவில் இப்படியொரு கேங்ஸ்டர் திரைப்படமா என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் செல்வா. இப்படம் வெளிவந்த நேரத்தை விட, தற்போதுதான் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறது.

மேலும் புதுப்பேட்டை 2 எப்போது என்றுதான் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சினேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள், பாலா சிங், நிதீஷ் வீரா ஆகியோர் நடித்திருந்தனர்.

2006ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2006 Best Tamil Movies



இம்சை அரசன் 23ஆம் புலிகேசி


வைகைப்புயல் வடிவேலுவின் கலகலப்பான நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. எப்போதுமே வரலாற்று படத்தை ஆக்ஷன் கதைக்களத்தை வைத்து தான் உருவாக்குவார்கள்.

ஆனால், வரலாற்று கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையை வைத்து எடுக்கலாம், அதில் மாபெரும் வெற்றியை கூட பெறலாம் என இப்படத்தின் மூலம் காட்டியிருப்பார் இயக்குநர் சிம்புதேவன். இப்படத்தில் வடிவேலுடன் இணைந்து நாசர், நாகேஷ், மனோரமா, இளவரசு, தம்பி ராமையா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2006 Best Tamil Movies


திமிரு



நடிகர் விஷாலின் ஆக்ஷன் நடிப்பில் செம மாஸாக வெளிவந்த திரைப்படம் திமிரு. இன்று வரை இவருடைய திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டால், அதில் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும்.

இப்படத்தில் கதாநாயகியாக ரீமா சென் நடிக்க, ஸ்ரேயா ரெட்டி வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வடிவேலு, மனோஜ் கே. ஜெயன், ஐ.எம். விஜயன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2006ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2006 Best Tamil Movies



வேட்டையாடு விளையாடு


இயக்குநர் கவுதம் மேனன் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், கமல் ஹாசனின் ரசிகராகவும் இயக்கிய திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் போலீஸ் ஆபிஸராக கலக்கியிருப்பார் கமல் ஹாசன்.

குறிப்பாக இன்ட்ரோ காட்சியில், எதிரியிடம் ‘என் கண்ணு வேணும்னு கேட்டியாமே’ என்று அவர் பேசும் வசனம் இன்று வரை செம மாஸ் சீனாக கொண்டாடப்படுகிறது. மேலும் கதாநாயகி ஜோதிகா, வில்லன் டேனியல் பாலாஜி ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக இருக்கும். படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், பின்னணி இசையும் தான்.

2006ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2006 Best Tamil Movies


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *