130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம்! கிர்லோஸ்கர் குழுமத்தை தோளில் சுமக்கும் இளம் மானசி கிர்லோஸ்கர்

130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம்! கிர்லோஸ்கர் குழுமத்தை தோளில் சுமக்கும் இளம் மானசி கிர்லோஸ்கர்


கிர்லோஸ்கர் குழுமத்தின் புதிய நட்சத்திரமாக மானசி கிர்லோஸ்கர் டாடா உருவெடுத்துள்ளார்.

புதிய தலைமைப் பண்பாடு

130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிர்லோஸ்கர் குழுமத்தில்(Kirloskar Group) முக்கிய பதவிகளை ஏற்றுக் கொண்டு, இந்திய தொழில் உலகில் முக்கியமான நபராக மானசி கிர்லோஸ்கர் டாடா(Manasi Kirloskar Tata) உருவெடுத்துள்ளார்.

2022 நவம்பரில் அவரது தந்தை விக்ரம் கிருஷ்கர் மறைவுக்குப் பின்னர், ரூ.13,844 கோடி மதிப்புள்ள இந்த தொழில் குழுமத்தை வழி நடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

Rising Star of Indian Business Manasi Kirloskar Tata

உச்சத்தை வழங்கிய அறிவுக்கூர்மை

1990 ஆகஸ்ட் 7ம் திகதி பிறந்த மானசி, தனது மூலோபாய சிந்தனை மற்றும் புதுமையான அணுகுமுறையின் மூலம் கிர்லோஸ்கர் குழுமத்தின் உச்சத்தை அடைந்துள்ளார்.

கிர்லோஸ்கர் ஜாய்ண்ட் வென்ச்சர் பிரைவேட் லிமிடெட்டின்(Kirloskar Joint Venture Private Limited) தலைவர் மற்றும் டொயோட்டா என்ஜின் இந்தியா லிமிடெட் (Toyota Engine India Limited) மற்றும் கிர்லோஸ்கர் டொயோட்டா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட்(Toyota Engine India Limited) ஆகியவற்றின் முக்கிய நபராக அவர் பதவிகளை ஏற்றுள்ளார்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்டின்(Toyota Kirloskar Motors Private Limited) இயக்குநரகத்தில் பணியாற்றி, பின்னர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது தலைமைத்துவ திறமை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் டொயோட்டாவின் இரண்டாவது ஹைப்ரிட் வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் அவரது பங்களிப்பு, புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

Rising Star of Indian Business Manasi Kirloskar Tata

பாரம்பரிய நடைமுறைகளுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், குழுமம் தொழில் துறையில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்கிறார்.

கல்வி மற்றும் கலை உணர்வு


ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில்(Rhode Island School of Design) இருந்து கலை இளங்கலை பட்டம் பெற்ற மானசி, கலை திறன் மற்றும் தொழிலதிபரின் திறமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறார்.

அவரது உலகளாவிய பார்வை மற்றும் புதுமையான அணுகுமுறை கிர்லோஸ்கர் குழுமத்தை முன்னோடி நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான முதல் இளம் தொழில் சாம்பியனாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம், நிலைத்தன்மை மற்றும் சமூக பொறுப்புக்கான அவரது அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில், நோயல் டாடாவின் மகனும் ரத்தன் டாடாவின் உறவினருமான நெவில் டாடாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தொழில்முறை முயற்சிகளில் கவனம் செலுத்தி, இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *