11 ஆண்டுகளுக்கு பின் ரீ- என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்.. கோலாகலமாக நடந்த பட பூஜை

அப்பாஸ்
தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
கிட்டதட்ட 11ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருக்கும் நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் 11 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ரீ- என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்
அதன்படி, ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படத்தில் லவ்வர் படத்தில் நடித்து புகழ் பெற்ற நாயகி கௌரி பிரியா நடிக்கவுள்ளார்.
பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்கும் இப்படம் முழுமையான பொழுது போக்கு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இந்த புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.