10 கோடி செலவிட்டாலும் இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது – நடிகை மிருணாள் தாகூர்

10 கோடி செலவிட்டாலும் இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது – நடிகை மிருணாள் தாகூர்


மிருணாள் தாகூர்

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இவர் நடித்த சீதா ராமம் படம் மாபெரும் ஹிட் ஆனதை தொடர்ந்து, இவருக்கென்றே தனி மார்க்கெட் திரையுலகில் உருவாகிவிட்டது.

டோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்தன. சில தமிழ் படங்களில் நடிப்பதாகவும் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் தற்போது இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவ்வளவு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது

நடிகை மிருணாள் தாகூர் நடிகர் தனுஷை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. இது பரபரப்பை கிளப்பிய நிலையில் பேசுபொருளாக மாறியது. ஆனால், அது முற்றிலும் தவறான ஒன்று என மிருணாள் மறுப்பு தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர் “10 கோடி ரூபாய் நான் செலவு செய்திருந்தாலும் கூட இந்த அளவிற்கு எனக்கு பப்ளிசிட்டி கிடைத்திருக்காது” என கூறியுள்ளார். வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *