ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய் டிவியின் செல்லம்மா சீரியல்… ஜீ தமிழ் நாயகி நடிக்கிறாரா?

செல்லம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான எந்த சீரியலையும் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
பழைய சீரியல்கள் முடிவதும் புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி விடுகிறார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சீரியல் செல்லம்மா.
அன்ஷிதா முக்கிய நாயகியாக நடித்த இந்த தொடர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
செல்லம்மா என்ற பெண்ணை மையப்படுத்தியே இந்த கதை முழுவதும் நகர்ந்தது.
ரீமேக்
தமிழில் ஹிட்டடித்த இந்த சீரியல் இப்போது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். இந்த தொடர் மூலம் தமிழில் ஒளிபரப்பான மாரி சீரியலில் நடித்துவந்த அஷிகா படுகோன் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகிறாராம்.
விரைவில் செல்லம்மா சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாக உள்ளது.