வெளிவந்தது விஷால் 35 – வது படத்தின் படப்பிடிப்பு அப்டேட்.. எங்கு, எப்போது தெரியுமா?

விஷால்
தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.
அடுத்து விஷால் ஈட்டி திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு கதையில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.வி.சவுத்ரி தயாரிக்கிறார்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
படப்பிடிப்பு அப்டேட்
இந்நிலையில், அடுத்து விஷால் நடிக்கும் அவரது 35 – வது திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னை பூந்தமல்லியில் தொடங்க உள்ளது.