வெளிவந்தது ஜீ தமிழில் ஆல்யா மானசா நடிக்கும் பாரிஜாதம் சீரியலின் புரொமோ.. இதோ

ஆல்யா மாசனா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா. மானாட
மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை பக்கம் வந்தவர் அதன்பின் ராஜா ராணி, ராஜா ராணி 2, இனியா என சீரியல்கள் தொடர்ந்து நடித்து வந்தார்.
இனியா தொடருக்கு பின் அடுத்த சீரியலில் கமிட்டாக நேரம் எடுத்த ஆல்யா மானசா தனது பிறந்தநாளில் ஜீ தமிழில் சீரியல் கமிட்டாகி இருப்பதாக அறிவித்தார்.
புரொமோ
இந்த நிலையில் ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது.
காது கேட்காத நாயகி, இசையுலகில் சாதிக்கும் நாயகன் இவர்களை சுற்றிய பயணமாக தொடர் இருக்கும் என தெரிகிறது.
இந்த புதிய தொடருக்கு பாரிஜாதம் என பெயர் வைத்துள்ளனர், இதோ சீரியலின் புரொமோ,