வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ்… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ்… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் இளம் சதுரங்க நட்சத்திரம், டி. குகேஷ், வரலாறு படைத்து, உலகின் இளம் சதுரங்க சாம்பியனாகியுள்ளார்.

சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் நிறைவு விழா​வில், உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்​கம், டிராபி​யுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகை​யும் வழங்​கப்​பட்​டது. 

வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Oungest World Chess Champion Gukeshs Net Worth

18 வயதான இவர், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 14-வது மற்றும் இறுதி ஆட்டத்தில், சீனாவின் தற்போதைய சாம்பியன் டிங் லிரனை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளார்.

14 ஆட்டங்களில் 7.5 புள்ளிகள் பெற்று, லிரனின் 6.5 புள்ளிகளை முறியடித்து சாதிதனை படைத்துள்ளார். அவரை ஊக்கப்​படுத்​தும் வகையில் தமிழக அரசு சார்​பில் ரூ.5 கோடி ரூபாய் பரிசு வழங்​கப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார்.

வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Oungest World Chess Champion Gukeshs Net Worth

வரலாற்றில் மிக இளம் வயது செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் 4-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய டி.குகேஷ், வியக்க வைக்கும் வகையில் இளம் வயதிலேயே செஸ் உலகில் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

அவரது நிகர மதிப்பு மற்றும் அவரின் வெற்றியின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் தொடர்பில் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Oungest World Chess Champion Gukeshs Net Worth

செத்து மதிப்பு 

மே 29, 2006 இல், இந்தியாவின் சென்னையில் பிறந்த குகேஷ், ஏழு வயதில் செஸ் விளையாடத் தொடங்கியுள்ளார். அவரின் விடதமுயற்சி மற்றும் செஸ் விளையாட்டு மீதான ஆர்வம் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. 

அவரது தந்தை, ENT அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் அவரது தாயார், நுண்ணுயிரியல் நிபுணரான டாக்டர் பத்மா  ஆகியோரின் ஒத்துழைப்பு குகேஷூன் இந்த வெற்றிக்கு துணைப்புரிந்துள்து.

வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Oungest World Chess Champion Gukeshs Net Worth

குகேஷின் தந்தை தனது மகனின் செஸ் வாழ்க்கையை முழுமையாக ஆதரிப்பதற்காக தனது மருத்துவப் பயிற்சியையும் கைவிட்டார். அவரது பெற்றோர் சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 4 ஆம் வகுப்புக்குப் பிறகு அவரை முழுநேரப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க முடிவு செய்துள்ளனர்.

சொத்து மதிப்பு

இந்த வெற்றிக்குப் பின், குகேஷுக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தில் வெற்றி பெற்றவருக்கு 1.69 கோடி ரூபாய் வழங்கப்பட்டதால், மூன்று ஆட்டங்களில் வென்ற குகேஷுக்கு மொத்தம் 5.07 கோடி ரூபாய் கூடுதல் பரிசாக கிடைத்துள்ளது.

வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Oungest World Chess Champion Gukeshs Net Worth

இதன் மூலம், சில நாட்களில் அவர் 17 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார். முந்தைய போட்டிகளில் வென்ற தொகை மற்றும் விளம்பர வருவாயையும் சேர்த்தால், குகேஷின் மொத்த வருமானம் 25 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. வெறும் 18 வயதில் கோடிகளில் பணம் சம்பாதித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *