வியப்பில் ஆழ்த்திவிட்டார்.. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் குறித்து நடிகை த்ரிஷா!

த்ரிஷா
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் என பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
டூரிஸ்ட் ஃபேமிலி
தற்போது, இந்த படத்தை பாராட்டி நடிகை த்ரிஷா பதிவு ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ” இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிகவும் சிறப்பு. படம் மிகவும் அருமையாக இருந்தது. சசிகுமார் சார் அவருடைய சிறந்த நடிப்பால் வியப்பில் ஆழ்த்திவிட்டார். இது போன்ற ஒரு படத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.