வின்டேஜ் மோடுக்கு சென்ற பிக் பாஸ் புகழ் ஓவியா.. இணையத்தை கலக்கும் வீடியோ

ஓவியா
கடந்த 2010ம் ஆண்டு தமிழில் சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் மூலம் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா.
முதல் பட வெற்றிக்கு பின் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.
பட வாய்ப்புகள் குறைய விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உருவானது.
அதன் பின், 2024ம் ஆண்டு பூமர் அங்கிள் என்ற படம். பின், வெப் சீரியஸிலும் நடித்தார். ஆனால் எதுவும் சரியாக ஓடவில்லை.
வைரல் வீடியோ
இந்நிலையில், தற்போது ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.