விஜய் சேதுபதி மகன் இந்த நடிகரின் தீவிர ரசிகராம்.. யார் தெரியுமா

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவரது பீனிக்ஸ் படம் வரும் ஜூலை 4ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி இருக்கிறார்.
விஜய் ரசிகன்
இந்நிலையில் சூர்யா சேதுபதி அளித்த பேட்டியில் தான் விஜய் மற்றும் சிம்பு ஆகியோரின் ரசிகன் என கூறி இருக்கிறார்.
“விஜய்யின் மெர்சல் படத்தை 30 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். மாஸ்டர் படத்தின் இன்ட்ரோ காட்சியை எத்தனை முறை பார்த்திருப்பேன் என தெரியாது” என சூர்யா கூறி இருக்கிறார்.