விக்ரம் படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது விஜய் சேதுபதி இல்லை! வேறு யார் தெரியுமா?

விக்ரம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியை கமல் ஹாசனுக்கு தேடி தந்த திரைப்படம் விக்ரம்.
கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
இப்படத்தில் வெறித்தனமான வில்லனாக சந்தனம் என்கிற கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதுவும் அவருடைய என்ட்ரி சீன் செம மாஸாக இருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதி மிகப்பெரிய காரணமாக இருந்தார்.
ஆனால், இவர் ஏற்று நடித்திருந்த சந்தனம் என்கிற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ராகவா லாரன்ஸ் தானாம். படத்தின் கதை கேட்கும் போது, அதில் ஒரு குடும்பத்தை எரிப்பது போல் காட்சி இருக்கிறது என்பதால், இப்படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.






