விக்ரம் அடுத்த படம் இவருடனா? ஒரே நேரத்தில் இத்தனை படங்களா

நடிகர் விக்ரம் தனது 63வது படத்திற்காக மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அது மட்டுமின்றி 64வது படத்திற்காக 96 பட புகழ் பிரேம் குமார் உடன் இணைந்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுக்கு மத்தியில் அவர் தனது இன்னொரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.
வேல்ஸ் தயாரிப்பு
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க தான் விக்ரம் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். இந்த படமும் உறுதி ஆனால் ஒரே நேரத்தில் விக்ரம் கையில் மூன்று படங்கள் இருக்கும்.
இயக்குனர் விஷ்ணு தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் HI படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.