வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க


வடிவேல் பாலாஜி

விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் வடிவேலு பாலாஜி. நடிகர் வடிவேலு போலவே வேடமிட்டு அனைவரையும் சிரிக்க வைப்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.



கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின் சிரிச்சா போச்சு மிகப்பெரிய அளவில் வடிவேல் பாலாஜிக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. கோலமாவு கோகிலா, சுட்ட பழம் சுடாத பழம் மற்றும் யாருடா மகேஷ் ஆகிய மூன்று திரைப்படங்களில் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க | Vadivel Balaji Son Latest Photo With Vadivel Getup



இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீகாந்த் என்ற மகனும், ஸ்ரீதேவி என்கிற மகளும் உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவருடைய மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை திரையுலகில் உள்ள அனைவருக்கும் தந்தது.

வடிவேல் பாலாஜியின் மகன்

பாலாஜியின் பிள்ளைகளின் படிப்பு செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், தனது தந்தையை போலவே கெட்டப் போட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெற்றிகொடிக்கட்டு படத்தில் வரும் துபாய் return வடிவேலு போல், வடிவேல் பாலாஜி கெட்டப் போட்டு பல மேடைகளில் நகைச்சுவை செய்துள்ளார். அதை யாராலும் மறக்கவே முடியாது. அந்த கெட்டப்பை தற்போது வடிவேல் பாலாஜியின் மகன் போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க | Vadivel Balaji Son Latest Photo With Vadivel Getup


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *