வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை – பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை – பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!


அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை



அதன் சமீபத்திய அறிவிப்பில், இது மேலும் தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் இலங்கையின் வடக்கே அருகில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள், குறிப்பாக கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் வசிக்கும் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை - பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Low Pressure Area To Formed Bay Bengal Sri Lanka

இதேவேளை, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (16) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளுக்கு எச்சரிக்கை


வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.


வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். 

மேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.


வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை - பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Low Pressure Area To Formed Bay Bengal Sri Lanka

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலைமையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *