ரோஹித்துடன் ஏற்பட்ட பிரச்னை? அதனால்தான் அஷ்வின் ஓய்வு அறிவித்தார் – பின்னணி இதுதான்!

ரோஹித்துடன் ஏற்பட்ட பிரச்னை? அதனால்தான் அஷ்வின் ஓய்வு அறிவித்தார் – பின்னணி இதுதான்!


ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போடிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அஷ்வின்  

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்களையும் 3503 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 சதம் மற்றும் 14 அரைசதங்களை அடித்துள்ளார்.

ரோஹித்துடன் ஏற்பட்ட பிரச்னை? அதனால்தான் அஷ்வின் ஓய்வு அறிவித்தார் - பின்னணி இதுதான்! | Whats Reason Behind Ravinchadran Ashwin Retirement

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது . இந்த சூழலில் ,இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே ரோகித் சர்மா மற்றும் அஷ்வின் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே அஷ்வின் விளையாட அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 பிரச்னை? 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அஷ்வின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெற்றார். மூன்றாவது போட்டியிலும் அஷ்வின் விளையாடவில்லை.

ரோஹித்துடன் ஏற்பட்ட பிரச்னை? அதனால்தான் அஷ்வின் ஓய்வு அறிவித்தார் - பின்னணி இதுதான்! | Whats Reason Behind Ravinchadran Ashwin Retirement

இப்படிப்பட்ட சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக ஓய்வு பெறுவதாக அஷ்வின் அறிவித்துள்ளார். இதனிடையே ரோகித் சர்மாவும் அஸ்வினும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்றும் உறுதி இல்லாத தகவல் பரவி வருகிறது.

முன்பு நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் இடம் பெற்றிருந்தார். கடந்த 9 இன்னிங்ஸில் அஷ்வின் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இப்படி ஒரு தகவல் ஒரு பக்கம் இருந்தாலும் 38 வயதாகும் அஷ்வின் சரியான நேரத்தில் தனது ஓய்வை அறிவித்திருப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *