ரீரிலீஸ் ஆகும் சூர்யாவின் அஞ்சான்.. இந்த முறை இப்படி ஒரு மாற்றமா?

சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படங்களில் ஒன்று அஞ்சான். 2014ல் ரிலீஸ் ஆன இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார்.
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறேன் என ரிலீஸுக்கு முன் லிங்குசாமி பேட்டி கொடுத்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதுவே படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.
ரீரிலீஸ்
இந்நிலையில் தற்போது வரும் நவம்பர் 28ம் தேதி அஞ்சான் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.
மீண்டும் எடிட் செய்யப்பட்டு தான் படம் வெளியாக இருக்கிறது. அதனால் காட்சிகளில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.