ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படத்தில் இந்த முன்னணி நடிகர் நடிக்கிறாரா?…

காந்தாரா படம்
காந்தாரா, கன்னட சினிமாவில் உருவாகி வெளியான ஒரு படம்.
கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படம் கன்னடத்தை தாண்டி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் Tulu மொழியில் வெளியானது.
ரூ. 16 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் பல கோடி வசூல் வேட்டை நடத்தியது.
இப்பட வெற்றியை தொடர்ந்து காந்தாரா 2ம் பாகம் தயாராகி வருகிறது.
வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். காந்தாரா படத்துக்கு முன் என்ன நடந்தது என்பதை காந்தாரா 2 ஆக உருவாகியிருக்கிறது.
3ம் பாகம்
தற்போது காந்தாரா படத்தின் 3ம் பாகத்தையும் எடுக்க ரிஷப் ஷெட்டி பிளான் செய்துள்ளாராம். காந்தாரா படத்துக்குப் பின் என்ன நடந்தது என்று சொல்ல திட்டமிட்டு இருக்கிறாராம் ரிஷப் ஷெட்டி.
இந்த 3ம் பாகத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.