ராஷ்மிகாவின் 'தம்மா' திரைப்படம் எப்படி உள்ளது? முதல் விமர்சனம் இதோ

தம்மா
இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தம்மா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குர்ரானா, நவாஸுதீன் சித்திக், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.
நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், தம்மா படத்தை பார்த்த பாலிவுட் விமர்சகர் ஒருவர் தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், படம் சிறப்பாக உள்ளது என்றும் 4/5 மார்க் கொடுத்துள்ளார்.
நகைச்சுவை, ஆக்ஷன், சூப்பர் நாச்சுரல் பவர், ரொமான்ஸ் என படத்தில் அனைத்துமே உள்ளது. மூஞ்சியா படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார் என அவர் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.