ராஜி வீட்டை விட்டு போகிறாரா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசியை போலவே ராஜிக்கு நடந்ததும் பொய் கல்யாணம் தான் என்பது எல்லோருக்கும் தெரியவந்துவிட்டத்து. அதனால் ராஜியை தங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொள்ளலாம் என அவளது பெற்றோர் முடிவெடுக்கின்றனர்.
அவர்கள் வந்து ராஜியை அழைக்க, அவள் நேராக கதிரிடம் சென்று கேட்கிறாள். ஆனால் அவர் உன்னுடைய விருப்பம் என சொல்லவிடுகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
ராஜி என்ன முடிவு எடுக்கிறார் என்பது தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
கதிர் என் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார், திருமணம் பதிவாகி இருக்கிறது, நான் இங்கே தான் இருப்பேன் என அவர் கூறிவிடுகிறார். அதனால் கதிர் மகிழ்ச்சி ஆகிறார்.
ப்ரோமோவை பாருங்க.