ரஷ்யாவின் மூத்த ஏவுகணை விஞ்ஞானி சுட்டுக்கொலை: ரஷ்ய ஊடகவியலாளர் தகவல்

ரஷ்யாவின் மூத்த ஏவுகணை விஞ்ஞானி சுட்டுக்கொலை: ரஷ்ய ஊடகவியலாளர் தகவல்


பல்லாயிரம் அப்பாவி உக்ரைனியர்கள் படுகொலைக்கு உதவியாக ஏவுகணைகளை மேம்படுத்தும் பணியிலிருந்த ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் மூத்த ஏவுகணை விஞ்ஞானி சுட்டுக்கொலை

ரஷ்யாவின் மூத்த ஏவுகணை விஞ்ஞானியான Mikhail Shatsky என்பவர், மாஸ்கோவிலுள்ள பூங்கா ஒன்றில், மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இணை பேராசிரியரான Mikhail, உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் Kh-59 cruise missile என்னும் ஏவுகணையை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் மூத்த ஏவுகணை விஞ்ஞானி சுட்டுக்கொலை: ரஷ்ய ஊடகவியலாளர் தகவல் | Breaking Putins Top Missile Scientist

Mikhail கொல்லப்பட்டதுமே, அவர் உக்ரைன் ரகசிய உளவாளிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து தப்பி வேறொரு நாட்டில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளரான Alexander Nevzorov, Mikhail கொல்லப்பட்டது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன், இறந்துகிடக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அது Mikhailதான் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவின் APN ஊடகமும், டிசம்பர் 11ஆம் திகதி, Mars Design Bureauவின் சாஃப்ட்வேர் துறை தலைவரான Mikhail Shatsky சுட்டுக்கொல்லப்பட்டார் என செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *